search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய விமான போக்குவத்துத்துறை மந்திரி சுரேஷ்பாபு"

    தஞ்சையில் மீண்டும் விமான சேவை தொடங்க கோரி மத்திய விமான போக்குவத்துத்துறை மந்திரி சுரேஷ்பாபுவுக்கு காங்கிரஸ் மனு அனுப்பியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வக்கீல் கோ.அன்பரசன் மத்திய விமான போக்குவத்துத்துறை மந்திரி சுரேஷ்பாபுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்கள் போர் விமானங்களில் பெட்ரோல் நிரப்புவதற்காக தஞ்சையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிள்ளை நாயக்கன் பட்டியில் விமான நிலையம் ஒன்றை நிறுவினார்கள். 30 வருடங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து சென்னைக்கு செல்வதற்காக சிறிய ரக விமானமான வாயுதூத் என்கிற விமான சேவையை மத்திய அரசு துவங்கியது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு மேற்படி விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த வைத்தது.

    தற்போது தஞ்சை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பேர் கணிப் பொறியாளர்களாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். தினசரி தஞ்சையிலிருந்து சென்னைக்கு ஆயிரக்கணக்கானோர், பேருந்து மற்றும் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

    ஆகவே இன்றைய சூழ்நிலையில் தஞ்சையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்கினால் தஞ்சை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள மக்களுக்கும், தஞ்சைக்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்திரிகர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×